நாடு முழுவதும் 9-ம்தேதி மாபெரும் போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு

0

பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி ரூ. 500, 1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார்.

இதையடுத்து மக்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை பெற்றுக் கொண்டனர். ரூ.1000 நோட்டு இன்னும் வெளியிடப்படவில்லை.
இதன் 2-வது ஆண்டை குறிக்கும் வகையில், நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி, புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

ரூபாய் நோட்டு விவகாரத்தில், இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீர்குலைத்து விட்டார். கருப்பு பணம் ஒழிப்பு – பயங்கரவாதிகளுக்கு செல்லும் நிதியை தடுத்தல் – கள்ள நோட்டுக்களை அழித்தல் ஆகிய 3 நோக்கங்களையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டினார்.

மத்திய அரசை கண்டித்து, நாடு முழுவதும் 9-ம் தேதி, காங்கிரஸ் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றும். காங்கிரஸ் தொண்டர்கள் அந்த தினம் 11 முதல் 1 மணி வரை ஆர்ப்பாட்டங்களை நடத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.