சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய வழக்கு கேரள ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது

0

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில், எம்.கே.நாராயணன் போத்தி என்பவர், பெண்கள் 21 நாட்கள் மட்டும் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல அனுமதிக்குமாறு கோவில் தலைமை தந்திரிக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, இது தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்றும், தேவைப்பட்டால் மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

இதேபோல், சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால், அந்த மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்படும் வரை அங்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று கூறி அந்த மனுவையும் ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.