Latest News
குழந்தையை மறந்து விமானநிலையத்தில் விட்டுவிட்டு விமானத்தில் பறந்த பெண்: திரும்பிய விமானம்யூடியுப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவிக்க முயன்ற கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்புவிமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று அவசர ஆலோசனைமாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க சென்னை வந்தார் ராகுல்காந்திபொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலிஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்சென்னை விமான நிலையத்திற்கு "ரெட் அலர்ட்"ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

வெளிநாட்டில் 17 ஆண்டுகளுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி வெற்றி வங்காளதேசத்தை வீழ்த்தியது

0

ஜிம்பாப்வே–வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சியல்ஹெட்டில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 282 ரன்னும், வங்காளதேச அணி 143 ரன்னும் எடுத்தன. இதனை அடுத்து 139 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 181 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. பின்னர் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 3–வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று முன்தினம் 4–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 2–வது இன்னிங்சில் 63.1 ஓவர்களில் 169 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இம்ருஸ் கெய்ஸ் 43 ரன்னும், அரிபுல் ஹக் 38 ரன்னும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பிரன்டன் மவுதா 4 விக்கெட்டும், சிக்கந்தர் ராசா 3 விக்கெட்டும், வெலிங்டன் மசகட்சா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். ஜிம்பாப்வே அணி வீரர் சீன் வில்லியம்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஜிம்பாப்வே அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டு இருக்கிறது. கடைசியாக அந்த அணி 2001–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிட்டகாங்கில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஒட்டுமொத்தத்தில் வெளிநாட்டு மண்ணில் அந்த அணியின் 3–வது வெற்றி இதுவாகும். அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணி டெஸ்ட் போட்டியில் பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி போட்டி தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் வருகிற 11–ந் தேதி தொடங்குகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.