டாஸ்மாக் தீபாவளி வசூல் : ரூ. 600 கோடி : இலக்கை மிஞ்சியது, டாஸ்மாக் மது விற்பனை

0

தீபாவளியையொட்டி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை, 4 நாட்களில், 602 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த சனிக்கிழமை 124 கோடி ரூபாய்க்கும், ஞாயிற்றுக்கிழமை 150 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆயின. தீபாவளி நாளில் மட்டும் 180 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்ததாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தாண்டு தீபாவளிக்கு, 320 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மதுப்பிரியர்களின் உற்சாகத்தால், இப்போது, இலக்கை மிஞ்சி, தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை ஆகி உள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.