Latest News
தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது- வானிலை மையம்கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி‘புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் விரைவில் போக இருக்கிறேன்’ எடப்பாடி பழனிசாமி பேட்டிஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு!கஜா புயல் இப்போது எங்கு உள்ளது? சேத விவரங்கள்கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்புகஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம்நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் : மின் வாரிய அதிகாரிகள் தகவல்கஜா புயலால் இதுவரை 8 பேர் உயிரிழப்புகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் - தீபிகா திருமணம்

குரூப் டான்ஸர் மும்பையில் திடீர் மரணம்! அனைத்து செலவுகளையும் ஏற்ற அஜித்

0

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம், ‘விஸ்வாசம்’. இவர்களின் கூட்டணியில் உருவாகும் நாலாவது திரைப்படம் இது. நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம், பொங்கல் அன்று ரிலீஸாக உள்ளது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது.
இந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் மும்முரமாக நடைபெற்றுவருகிறது. ஒரு பாடலின் காட்சிகளைப் படக்குழு படமாக்கிக்கொண்டிருந்தபோது, குரூப் டான்ஸரான சரவணன் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதனால், படக்குழு அதிர்ச்சியில் உறைந்தது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த சரவணனின் உடலை சென்னைக்கு எடுத்து வருவதற்கான எல்லாச் செலவுகளையும் அஜித்தே ஏற்றுக்கொண்டார். மேலும், சரவணனின் வீட்டில் நடந்த இறுதிச்சடங்கில் அஜித் கலந்துகொண்டு சரவணனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.