ஆட்சியை யார் பிடிக்க போறாங்கோ பிரசன்ன ஜோதிடர் லோகஷ் பாபு சவால் விடுகிறார்.

0

சதிஸ்கர் மிஸோராம் தெலுங்கான, ராஜஸ்தான் மத்திய பிரேதசம் ஆட்சியை யார் பிடிக்க போறாங்கோ
பிரசன்ன ஜோதிடர் லோகஷ் பாபு சவால் விடுகிறார்.
தற்போது நாடு முழுவது ஆவலுடன் எதிர்பார்க்கும், சதீஸ்கர், மத்திய பிரதேசம் ராஜஸ்தான் தெலுங்கான, மிசோராம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட மன்ற தேர்தலுக்கான பிரசாரம், தற்போது வெகு வேகமாக சூடுபிடித்துள்ளது, பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சிகள் இடையே வெறித்தனமான போட்டிகள் என்றாலும் அந்தந்த மாநிலங்களுக்கான பிரச்சனைகளுக்கு முக்கிய துவம் அளிக்கும், வேறு சில மாநில கட்சிகளும், ஒரு சில இடங்களை பிடிக்கும் என்று தெரிய வந்துள்ளது., இது குறித்து வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த பிரசன்ன ஜோதிடர் லோகேஷ் பாபு, நம்மிடம் கூறுகையில் இந்திய தேர்தல் ஆனைய அறிவிப்பின் படி, மத்திய பிரதேசம் மிசோர மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது, ராஜஸ்தான், தெலுங்கான மாநிலங்களில் டிசம்பர் 7 ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
சதீஸ்கர் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 12 ம் தேதி, முதல் கட்ட, வாக்குபதிவு முடிந்த நிலையில் 2 ம் கட்டமாக நவம்பர் 20ம் தேதி, 72 வாக்குபதிவு நடைபெற்றது அடுத்த ஆண்டில் நாடாளுமன்ற பொது தேர்தலில் நடைபெற விருக்கும் நிலையில் தற்போது நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளை பொது தேர்தலுக்கான முன்னோட்டமாக அரசியல் கட்சிகள் பார்க்கின்றன. இதே போல் நாடு முழுவதும் அரசியல் நோக்கர்களும் 5 மாநில தேர்தல் முடிவுகளை மிகுந்த ஆவலுடம் எதிர்நோக்கியுள்ளனர். எனவே தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் தற்போது, ஆட்சியில் இருக்கும் கட்சியும், ஆட்சியை பிடிக்க துடியாய், துடிக்கும் மிகுந்த எதிர்கட்சியினரும், அதிக பார்ப்புடன் உள்ளனர். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் நான் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை கணித்து இருக்கிறேன். நான் ஏற்கனவே சொன்ன தேர்தல் கணிப்புகள் கனித்து இருக்கிறேன். அப்படியே நடந்திருக்கின்றன. 2016 ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆஇஅதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். ஜெயலலிதா, இறந்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் கட்சியை உடைப்பார். கடந்த சில மாதங்களுக்கு,முன்பு குஜராத் சட்ட மன்ற தேர்தலில் பிஜேபி ஆட்சியை தக்க வைத்து கொள்ளும். சென்னை ஆர்.கே நகர் தொகுதி இடைதேர்தலில் டி.டி.வி தினகரன் வெற்றி பெறுவார். கர்நாடக சட்டசபை தேர்தலில் யாருக்கும் மெஜாரட்டி கிடைக்காது. 105 இடங்களை பிஜேபி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது, தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ வழக்கில் தினகரனுக்கு பாதகமாகவே இறுதி தீர்ப்பு வரும் என பிரசன்ன ஜோதிடத்தின் மூலம் ஏற்கனவே சொல்லியிருந்தன. அந்த கனிப்பு பொய்யாக வில்லை. மத்திய பிரதேசத்தில் மொத்தம்
230 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் கடந்த 13 வருஷமாக பிஜேபி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. அந்த கட்சிக்கு 160 சட்ட மன்ற உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் 120 எம் எல் ஏ க்களே கிடைப்பார்கள் என்றாலும், முதல்வர் சிவராஜ் சிங் செளவ்கான் மீண்டும் முதல்வர் பதவி ஏற்பார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி நூற்றுக்கும் அதிகமான இடங்களை பிடித்து மத்திய பிரதேசத்தில் வலுவான எதிர்கட்சியாக இருக்கும். ராஜஸ் தான் மாநிலத்தை பொறுத்த வரையில் முடிசூடா மகாராணி போல், ஆட்சி செய்த பிஜேபி சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியாவின் சாம்ராஜ்யம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வருகிறது.
ராஜஸ்தானில் பிஜேபி யின் செல்வாக்கு சரிந்து விட்டது என்பதை இந்த தேசத்திற்கு பறை சாட்ட போகிறது. இளம் தலைவர் சச்சின் பைலட் தலைமையில் 110 இடங்களை காங்கிரஸ் கட்சி வெற்றிபெருவது உறுதி.
பி.ஜே.பி 75 இடங்களை பிடிக்கும். சுயேட்சிகள் 10 இடங்களை பிடிக்கும். ஆந்திராவை இரண்டாக பிடித்து தெலுங்கான மாநிலம் உருவாக காரணமாக இருந்த டி.ஆர்.எஸ் கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான சந்திர சேகர ராவ் தன்னை இவ்வளவு சீக்கிரம் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று அவரே கூட யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த தேர்தலில் புறக்கணிக்க படுவார். சரித்திரம் படைத்த சந்திர சேகர ராவ் ஆட்சி முடிவுக்கு வரும். மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 65 க்கு கூடுதலான் இடங்களை காங்கிரஸ் தெலுங்கு தேத கூட்டணி வெற்றிப்பெறும். 40 இடங்கள் வரை சந்திர சேகர ராவும், இதர கட்சிகள் 10 இடங்களை பிடிக்கும்.
சதிஸ்கர் மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளமாக பிஜேபி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த தேர்தலில் கங்கிரஸ் பிஜேபி 2 கட்சிகளும் தலா 40 இடங்கள் வெற்றி பெறும். காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற அஜீத் ஜோகி ஜனதா காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவர் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் அதிசியம் நிச்சயம் நடக்கும். மிசோரா மாநிலத்தில் 40 தொகுதிகள் உள்ளது இங்கு 5 முறை முதல்வராக இருக்கும் லால்தன் வாலா தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்கிறது. இந்த முறை மிசோராம் தேதிய முன்னனி மாநில கட்சி 15 இடங்களுக்கு மேலாக கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இன்னொரு கட்சியான தேசிய மக்கள் கட்சிக்கு 10 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்த முறை பின்னுக்கு தள்ளபட்டுவிடும்…

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.