Breaking News
அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலர் என்னை அழிக்க முயற்சிக்கின்றனர்; மிதாலி ராஜ்

6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது.

இந்த போட்டியில் ஒரு நாள் போட்டிக்கான மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் விளையாடவில்லை.

அடுத்தடுத்து 2 ஆட்டங்களில் அரைசதம் அடித்த முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும், முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் ஆடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில், மிதாலி ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நிர்வாக குழு உறுப்பினர் டையானா எடுல்ஜி தனது பதவியை எனக்கு எதிராக பயன்படுத்தி விட்டார் என கூறினார். இதேபோன்று பயிற்சியாளர் ரமேஷ் பொவாரையும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோருக்கு மிதாலி ராஜ் எழுதியுள்ள கடிதத்தில், எனது 20 வருட கிரிக்கெட் விளையாட்டில் முதன்முறையாக நான் ஏமாற்றப்பட்டேன், மனஅழுத்தத்திற்கு ஆளானேன், வருத்தமடைந்தேன் என உணர்ந்தேன்.

என்னை அழிக்க மற்றும் எனது நம்பிக்கையை தகர்த்தெறிய முயற்சிக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலரால், எனது நாட்டிற்காக நான் ஆற்றும் பணியில் ஏதேனும் மதிப்பு இருக்கிறதா? என யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்

அணியில் இருந்து என்னை வெளியேற்றும் பயிற்சியாளரின் முடிவுக்கு டி20 கேப்டன் கவுர் ஆதரவு அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது மற்றும் புண்படுத்தும் வகையில் அமைந்தது. இந்த உண்மையை தவிர்த்து கவுருக்கு எதிராக எனக்கு ஒன்றும் இல்லை.

எனது நாட்டிற்கு உலக கோப்பையை வென்று தர விரும்பினேன். ஒரு பொன்னான வாய்ப்பினை நாம் இழந்து விட்டோம் என்பது என்னை துயரத்திற்கு ஆளாக்கியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.