நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி

0

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 418 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 90 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. 328 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 112.5 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தான் இன்னிங்ஸ் வெற்றியை ருசிப்பது இதுவே முதல் நிகழ்வாகும். நியூசிலாந்து அணியில் டாம் லாதம் (50 ரன்), ராஸ் டெய்லர் (82 ரன்), ஹென்றி நிகோல்ஸ் (77 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தும் பலன் இல்லாமல்போய் விட்டது.

முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை அள்ளிய பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை சாய்த்தார். மொத்தத்தில் யாசிர் ஷா 184 ரன்கள் விட்டுக்கொடுத்து 14 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தான் பவுலரின் 2-வது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இம்ரான்கான் 1982-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 116 ரன்களுக்கு 14 விக்கெட் வீழ்த்தியதே ஒரு டெஸ்டில் பாகிஸ்தான் பவுலரின் சிறந்த பந்து வீச்சாக நீடிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு வந்துள்ளது. கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி அபுதாபியில் தொடங்குகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.