Latest News
‘ஹூவாய் நிறுவன அதிகாரியை விடுவிக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ - கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கைமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு: விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? - லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்புபொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மந்திரியின் கன்னத்தில் அறைந்த வாலிபர் - மராட்டியத்தில் பரபரப்புஉத்தர பிரதேசத்தில் பனி மூட்டம்: அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் - 4 பேர் பலிபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் சிறையில் அடைப்புகடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடிப்புஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்நாக்பூரில் இணையதள விளையாட்டு; 17 வயது சிறுமி தற்கொலை

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அசார் அலி அரைசதம் அடித்தார்

0

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி தொடக்க நாளில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர்கள் பிலால் ஆசிப் 5 விக்கெட்டுகளும், யாசிர் ஷா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை நிதானமாக ஆடிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 61 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்துள்ளது. அசார் அலி 62 ரன்களுடனும், ஆசாத் ஷபிக் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய 38 வயதான முகமது ஹபீஸ் டக்-அவுட் ஆனார். இந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், தொடர்ந்து குறுகிய வடிவிலான போட்டிகளில் (ஒரு நாள் மற்றும் 20 ஓவர்) கவனம் செலுத்த போவதாகவும் ஹபீஸ் அறிவித்துள்ளார். 55-வது டெஸ்டில் ஆடும் ஆல்-ரவுண்டரான ஹபீஸ் இதுவரை 10 சதங்கள் உள்பட 3,644 ரன்கள் எடுத்துள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.