Latest News
மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டிதிமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிகுடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல்தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதிகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துஉத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம்அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனைதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கைமேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம்கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் பெர்த்தில் இன்று தொடக்கம்: இந்திய அணியின் வெற்றி தொடருமா?

0

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய பயணத்தை முதல்முறையாக வெற்றியுடன் தொடங்கி வரலாறு படைத்திருக்கும் இந்திய அணி அதே உத்வேகத்துடன் 2-வது டெஸ்டுக்கும் தயாராகியுள்ளது. தொடக்க டெஸ்டில் புஜாரா சதமும், அரைசதமும் அடித்து அணியின் வெற்றிக்கு ஆணிவேராக விளங்கினார். ரஹானே 2-வது இன்னிங்சில் 70 ரன்கள் விளாசினார். ஆனால் கடந்த 23 இன்னிங்சில் ஒரு சதமும் அடிக்காத குறையை போக்க வேண்டிய நெருக்கடி ரஹானேவுக்கு இருக்கிறது. பிரித்வி ஷா கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் இந்திய தொடக்க ஜோடியில் (முரளிவிஜய்- லோகேஷ் ராகுல்) மாற்றம் செய்யப்படவில்லை.

இந்திய அணிக்கு திடீர் பின்னடைவாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆகியோர் இந்த டெஸ்டில் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வின், வயிற்றின் அடிப்பகுதியில் வலியால் அவதிப்பட்டு வருகிறார். ரோகித் சர்மா முதலாவது டெஸ்டில் பீல்டிங் செய்த போது முதுகில் லேசான காயமடைந்தார். இருவரும் உடல்தகுதியை எட்டாததால் அவர்கள் விலக்கப்பட்டு இருப்பதாக அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி இடம் பெறுவார். அஸ்வின் இடத்தில் புவனேஷ்வர்குமார் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவர் இறங்குவர்.

இந்த டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானத்தின் பெயர், ஆப்டஸ். புதிதாக கட்டப்பட்ட இந்த ஸ்டேடியத்தில் டெஸ்ட் போட்டி அரங்கேறுவது இதுவே முதல்முறையாகும். இது ஆஸ்திரேலியாவின் 10-வது டெஸ்ட் மைதானதாக இணையப்போகிறது.

ஆடுகளம் (பிட்ச்) பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வேகமும், பந்து எகிறும் வகையிலும் (பவுன்ஸ்) இந்த ஆடுகளத்தை உருவாக்கி இருப்பதாக பிட்ச் பராமரிப்பாளர் கூறியுள்ளார். வெயிலும் வாட்டி வதைக்கும் போதும், ஆங்காங்கே வெடிப்புகள் ஏற்பட்டு தாறுமாறாக ‘பவுன்ஸ்’ ஆவதற்கு வாய்ப்பு உண்டு. மொத்தத்தில் இது வேகப்பந்து வீச்சின் சொர்க்கபுரியாக இருக்கும் என்பதே அனைவரின் கணிப்பாகும். அதனால் இங்கு பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிப்பது எளிதான விஷயமல்ல. மிகத்துல்லியமாக கணித்து ஆடாவிட்டால் பந்து பேட்டின் விளிம்பில் உரசிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் கேட்ச்சாக மாறி விடும்.

வேகப்பந்து வீச்சாளர்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட காளைகள் போல் சீறுவார்கள். இந்திய அணி பிரதான சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆடுவது குறித்து பரிசீலித்து வருகிறது. மறுபடியும் வெற்றியை சுவைப்பதற்காக நமது வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக வரிந்து கட்டுவார்கள்.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை சரிவில் இருந்து மீள்வதற்கு தீவிர முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை. முந்தைய டெஸ்டில் ஆடிய அணியே இந்த போட்டியிலும் விளையாடும் என்று கேப்டன் டிம் பெய்ன் அறிவித்துள்ளார். முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நேற்று வலை பயிற்சியின் போது பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முதலாவது டெஸ்டில் சோபிக்காததால் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பெரும் நெருக்கடியில் தவிக்கிறார். இங்குள்ள சீதோஷ்ண நிலை அவருக்கு உகந்த வகையில் இருக்கும். இதிலும் ஜொலிக்காவிட்டால் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி விடும்.

இதே போல் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்சும் அடிலெய்டு டெஸ்டில் திணறினார். அவரும் கணிசமான ரன்கள் எடுத்தால் மட்டுமே தப்பிக்க முடியும்.

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீச முடிவு செய்யலாம். இரு அணியில் யாருடைய கை ஓங்கும்? தாக்குப்பிடிப்பது யார்? தவிடுபொடியாவது யார்? என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:- இந்தியா: லோகேஷ் ராகுல், முரளிவிஜய், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பான்ட், ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா அல்லது புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலியா: மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், நாதன் லயன்.

இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.