Latest News
குழந்தையை மறந்து விமானநிலையத்தில் விட்டுவிட்டு விமானத்தில் பறந்த பெண்: திரும்பிய விமானம்யூடியுப்பை பார்த்து வீட்டிலேயே பிரசவிக்க முயன்ற கர்ப்பிணி, குழந்தை உயிரிழப்புவிமான நிறுவனங்களுடன் விமான போக்குவரத்து செயலர் இன்று அவசர ஆலோசனைமாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலாதேவிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க சென்னை வந்தார் ராகுல்காந்திபொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலிஎஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்சென்னை விமான நிலையத்திற்கு "ரெட் அலர்ட்"ஜம்மு காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஅந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு

இதுதான் ‘தல’ பில்லா ஓபனிங் சீனை இப்ப பார்த்தாலும் சும்ம அதிரும் !

0

தமிழ் சினிமாவில் வெளியான ரீமேக் படங்களில் மிகப்பெரிய அளவில் மெகாஹிட்டான படம் என்றால், அது பில்லா தான். தோல்விகளால் துவண்டுகிடந்த அஜித்துக்கு பில்லா படம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றால் மிகையல்ல.

இன்றளவும் ரஜினி படத்தை ரீமேக் செய்து வெற்றி பெற்ற ஒரே நடிகர் அஜித் மட்டுமே. பில்லா படம் வெளியாகி இன்றுடன் 11 வருடங்கள் ஆகிவிட்டது. 2007ம் ஆண்டு இதே நாளில் தான் அஜித், நயன்தாரா, நமிதா நடிப்பில் பில்லா படம் வெளியானது. விஷ்ணு வர்தன் இயக்கி இருந்தார்.

வில்லன் அல்லது டான் என்பவர் அதுவரை பார்க்க முரடன் போல், பயங்கரமாக காட்டுவார்கள். ஆனால் பில்லா படத்தில் மிக ஸ்டைலிஸாக அஜித்தை காட்டியிருப்பார்கள். இந்த படத்தில் அற்புதமாக மிக அழகாக அஜித் காணப்படுவார். டேவிட் பில்லா என்ற கேரக்டரில் நடிக்கும் அஜித் ஒரு கட்டத்தில் கொல்லப்படுகிறார். அதை மறைக்கும் போலீஸ் அதிகாரி பிரபு. வேலு என்கிற அஜித்தாக நடிக்க வைத்து, திருட்டு கும்பலை பிடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் பிரபு இறந்தவிடுகிறார். ஆனால் அஜித்தை போலீஸ்காரர்கள் பில்லா என்று கூறி துரத்துகிறார்கள். அதேநேரம் காட்டிக்கொடுத்ததுக்காக திருட்டு கும்பல் அஜித்தை துரத்துகிறது. இறுதியில் போலீசில் உயர்அதிகாரி வேடத்தில் இருக்கும் ரகுமான் தான் சூத்திரகாரர் என்பதை அஜித் கண்டுபிடிக்கிறார். இறுதியில் தான் பில்லா இல்லை என்பதை நிரூபித்து சுதந்திரமாக வருகிறார். இதுதான் படத்தின் கதை.

டேவிட் பில்லாவாக ஒரு காட்சியில் வரும் அஜித், போலீசிடம் இருந்து தப்பிக்கும் காட்சி இன்றும் தமிழ் சினிமாவில் ஸ்டைலாக அற்புதமாக வடிவமைக்கப்பட்ட காட்சியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் மைநேம் இஸ் பில்லா பாடலும் மிகச்சிறப்பாக காட்சி படுத்தப்பட்டிருக்கும். இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை இன்னும் பல வருங்களுக்கு பேசப்படும். நிச்சல் உடையில் நயன்தாராவின் சாகசங்கள், நமீதாவின் கவர்ச்சி நடனங்கள் பில்லா படத்தில் மிரட்டலாக இருக்கும். மொத்தத்தில் அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையை பில்லா படம் கொடுத்தது. மாஸ் ஹீரோவான அஜித் தன்னை மீண்டும் இப்படம் மூலம் புதுப்பித்துக்கொண்டார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.