Breaking News
ஒரு டிவிட் திரைக்கதையாகிறது – மோகன் ராஜா இயக்கத்தில் விஜய் தேவாரகொண்டா ?

விஜய் தேவராகொண்டா போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 30 வயதிற்குள் சாதித்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார். அதுகுறித்து டிவிட்டரில் அவருக்கும் இயக்குனர் மோகன் ராஜாவுக்கும் இடையேயான உரையாடல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டு தோறும் பல்வேறுப் பிரிவுகளின் கிழ் சாதனையாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் இந்தியப் பதிப்பான போர்ப்ஸ் இந்தியா இப்போது 30 வயதிற்குள் சாதித்த இந்திய சாதனையாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சினிமாத் துறையில் இருந்து அர்ஜூன் ரெட்டிப் புகழ் விஜய் தேவாரகொண்டா மட்டும் இடம்பெற்றுள்ளார்.

இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் டிவிட்டரில் ’ நான் 25 வயதில் இருக்கும்போது எனது வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பான 500 ரூபாயை வைத்திருக்காததால் எனது வங்கிக் கணக்கு மூடப்பட்டது. அப்போது எனது தந்தை 30 வயதிற்குள் நல்ல நிலைமைக்கு வந்துவிடு. அப்போதுதான் நீயும் உனது பெற்றோர்களும் நலமாக இருக்கும் போதே வெற்றியை அனுபவிக்க முடியும் எனக் கூறினார் ….4 வருடங்களுக்குப் பிறகு போர்ப்ஸ் பத்திரிக்கையின் 30 வயதிற்குள்ளானவர்களின் சாதனையாளர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளேன்’ என மகிழ்ச்சியான டிவிட்டைப் பகிர்ந்திருந்தார்.

அந்த டிவிட்டை ரீடிவிட் செய்த இயக்குனர் மோகன் ராஜா ‘ உங்கள் டிவிட் ஒரு சுவாரசியமான திரைக்கதையை எனக்குள் தூண்டியுள்ளது. பிற்காலத்தில் நீங்கள் என்னிடம் இதற்காக ராயல்டி கேட்கமாட்டீர்கள் என நம்புகிறேன்’ எனப் பகிர்ந்திருந்தார்.
அதற்குப் பதிலளித்த விஜய் ‘ அந்தப் படத்தில் நான் நாயகனாக நடிக்கும் பட்சத்தில் ராயல்டி கேட்கமாட்டேன்’ எனக் கூறியுள்ளார். அப்படி ஒருப் படம் உருவானால் மிகவும் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து சொல்லி வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.