Breaking News
தமிழகம் முழுவதும் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபையில் இன்று (பிப்.,11) 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர், தமிழகம் முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்களுக்கும் ரூ.2000 சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும். கஜா புயல், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கைத்தறி தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 60 லட்சம் குடும்பங்களுக்கு இந்த சிறப்பு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் 35 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களும், நகர்புறங்களில் 25 லட்சம் தொழிலாளர் குடும்பங்களும் பயனடையும். சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.1200 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது என முதல்வர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.