Latest News
உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம் வெற்றிபேஸ்புக் வலைத்தளம் முடங்கியதால் அதிர்ச்சி வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் செயலிழந்தன‘விவிபாட்’ எந்திரங்களின் பதிவுகளையும் எண்ணும் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவுபிரதமர் மோடி பிரசார மேடைக்கு கீழே திடீர் தீ விபத்துதமிழகத்தில் பிரசாரம் நாளை ஓய்கிறது: தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகைதேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கும் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்இந்தியாவில் மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.- ஐ.நா. அறிக்கைதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததுசென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைமோடி பிரசார பகுதியில் இறங்க வேண்டிய ராணுவ ஹெலிகாப்டர், ராகுல் காந்தி பேசும் மேடை அருகே இறங்கியது

விதிமுறைகளை மீறி பிரதமர் வேட்பாளராக அறிவிப்பு – தாய்லாந்து இளவரசி மன்னிப்பு கோரினார்

0

தாய்லாந்தில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயக ஆட்சியை கொண்டுவர வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து, மன்னர் மகா வஜ்ரலோங்கோன் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட்டார். அதன்படி அடுத்த மார்ச் 24-ந் தேதி அங்கு பொதுத்தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் இதனை கடுமையாக எதிர்த்தார். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், பொருத்தமற்றது என்றும் அவர் கூறினார். இதனையடுத்து பிரதமர் வேட்பாளருக்கான பட்டியலில் இருந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பெயரை தேர்தல் ஆணையம் நீக்கியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் “தாய்லாந்து நாட்டுக்கும், மக்களுக்கும் பணி செய்வதே என்னுடைய நேர்மையான நோக்கமாகும். இந்த நூற்றாண்டில் இல்லாத வகையில் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறி பிரதமர் வேட்பாளராக அறிவித்துகொண்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.