ஆர்யாவுடன் காதல்! டும் டும் டும் தேதியுடன் கன்ஃபார்ம் செய்த ஷாயிஷா!

0

ஆர்யா உடனான காதலை உறுதி செய்து விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக நடிகை ஷாயிஷா அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

காதலர் தினமான இன்று தன் காதலை ஆர்யாவுக்கு தெரிவித்த நடிகை ஷாயிஷா கூடவே கல்யாண தேதியையும் அறிவித்துள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு அடுத்து தமிழ் சினிமாவின் தற்போதைய காதல் ஜோடிப்புறாக்கள் ஆர்யா , ஷாயிஷா என கிசு கிசுக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் விதத்தில் காதலர் தினமான இன்று ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து தங்கள் காதலை உறுதி செய்துள்ளார் நடிகை ஷாயிஷா.

பெற்றோர்களின் ஆசீர்வாதத்தோடு வருகிற மார்ச் மாதத்தில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம் என்று கூறி காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஆர்யா, சயீஷாவின் இந்த திருமண அறிவிப்பு பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளதுள்ளது. அதே நேரத்தில் இவர்களின் இந்த காதலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.