Latest News
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரிய வழக்கு : சி.பி.சி.ஐ.டி. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவுகூட்டணி என்பதால் குட்டகுட்ட குனிய மாட்டோம் -பிரேமலதா விஜயகாந்த்குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு 99 பேருக்கு வாழ்நாள் தடை 3 இடைத்தரகர்கள் கைது; 2 தாசில்தார்களிடம் விசாரணைசென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா நாளை கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடி ஏற்றுகிறார்டெல்லியில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிப்புகுற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் ‘டிக்கெட்’ கொடுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் யோசனை

பிரசவத்திற்குப் பின் உங்கள் அம்மா அழகை இழந்துவிட்டாரா ? – கிண்டல் செய்தவர்களுக்கு சமீரா ரெட்டி கேள்வி !

0

பிரபல நடிகை சமீரா ரெட்டி கருவுற்றிருக்கும் தனது உடல்குறித்து கேலிப் பேசியவர்களுக்கு எதிராக கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்தவர் சினிமாவில் இருந்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கும் அவர் தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்தப் புகைப்படங்களை வைத்து அவரது உடலமைப்பைக் கேலி செய்யும்விதமாக பதிவுகளும் மீம்ஸ்களும் உருவாக்க ஆரம்பித்தனர் சிலர். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ ஆரம்பிக்க சமீராவின் கண்களுக்கும் அந்த மீம்ஸ்கள் சென்றிருக்கிறது. பொறுப்பற்ற இந்த செய்கையால் அதிருப்தியடைந்த சமீரா இது குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் ’உடல் அமைப்பைக் கொண்டு கிண்டல் செய்பவர்களுக்கு ஒரு கேள்வி.. நீங்கள் உங்கள் அம்மாவின் உடல் வழியாகத் தானே வந்தீர்கள், உங்களைப் பெற்றபின் உங்களது அம்மாவின் கவர்ச்சி குறைந்துவிட்டதா என்று அவரிடமே கேளுங்கள். உடலமைப்பைப் பற்றி விமர்சிப்பது தவறானது, அவமதிப்பானது. என் தற்போதைய உடலமைப்பு குறித்தும் கருவுற்றது குறித்தும் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்’ எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.