அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம்: இந்தியருக்கு வாழ்நாள் சிறை

0

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் தீபக் தேஷ்பாண்டே (வயது 41). இந்திய வம்சாவளி. இவர் 2017–ம் ஆண்டு, ஜூலை மாதம் அங்கு ஆர்லண்டோவை சேர்ந்த ஒரு சிறுமியுடன் இணையதளம் வழியாக தொடர்பு கொண்டார். தான் ஒரு மாடலிங் ஏஜெண்டு என்று அறிமுகம் செய்து கொண்டார். அந்த சிறுமியை, தனது நிர்வாண படத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அந்த சிறுமியும் அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

அடுத்து, அதே சிறுமியை வேறு இருவரது பெயரில் தொடர்பு கொண்டு, தனக்கு தொடர்ந்து நிர்வாண படங்களை அனுப்பி வைக்காவிட்டால், ஏற்கனவே பெற்று வைத்துள்ள நிர்வாண படங்களை பரப்பி விடப்போவதாக மிரட்டினார்.

அதே ஆண்டின் செப்டம்பர் மாதம் ஆர்லண்டோவுக்கு சென்ற தேஷ்பாண்டே, அங்கு அந்த சிறுமியை ஒரு ஓட்டலுக்கு வரவழைத்தார். அந்த சிறுமியை ஆபாச படங்கள் எடுத்து தள்ளினார். அத்துடன் அவளை பலாத்காரமும் செய்தார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவர் தனது லீலைகளை தொடர்ந்தார். இதை யாரோ மோப்பம் பிடித்து, அமெரிக்க மத்திய புலனாய்வு படை (எப்.பி.ஐ.) யிடம் போட்டுக்கொடுத்து விட்டனர்.

எப்.பி.ஐ. ஏஜென்டு தன்னை ஒரு சிறுமி என சொல்லி, தேஷ்பாண்டேயுடன் ஆன்லைனில் பழகி, அவர் மீதான புகார் உண்மைதான் என கண்டறிந்து கைது செய்தார்.

இது தொடர்பாக தேஷ்பாண்டே மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக, சிறையில் இருந்து கொண்டே, தான் பலாத்காரம் செய்த சிறுமியை கடத்திக்கொல்வதற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் அதையும் எப்.பி.ஐ. மோப்பம் பிடித்து முறியடித்தது. இது தொடர்பாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தன. இப்போது தேஷ்பாண்டே தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என கோர்ட்டு தீர்மானித்தது.

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்துக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், நிர்வாண படங்கள் எடுத்த குற்றத்துக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தும் மாவட்ட நீதிபதி கார்லோஸ் மென்டோஜா தீர்ப்பு அளித்தார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.