டெல்லியின் பந்து வீச்சில் சுருண்டது ஐதராபாத் – டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

0

ஐதராபாத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான 30-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 45 (40) ரன்கள், காலின் மன்ரோ 40 (24) ரன்கள் எடுத்தனர்.

ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசிய சயத் கலீல்அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட், அபிஷேக் சர்மா மற்றும் ரஷீத் கான் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 51 (47) ரன்கள், பேர்ஸ்டோ 41 (31) ரன்கள் எடுத்தனர்.

டெல்லி அணியில் சிறப்பாக பந்து வீசிய ரபடா 4 விக்கெட்டுகளும், கீமோ பால் மற்றும் மோரிஸ் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.