உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு

0

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடக்கிறது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள். இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர்களே பெரும்பாலும் உலக கோப்பை அணியிலும் தொடருவார்கள் என்று நம்பப்படுகிறது. ஓரிரு இடத்துக்கு மட்டுமே புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

2-வது விக்கெட் கீப்பர் இடத்துக்கு ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் போட்டியில் உள்ளனர். இதில் ரிஷாப் பான்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. லோகேஷ் ராகுல் 3-வது தொடக்க வீரராக இடம் பெறுவார் என்று தெரிகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பை கவனித்து வரும் லோகேஷ் ராகுல் 2-வது விக்கெட் கீப்பர் இடத்துக்கும் பரிசீலனை செய்யப்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

4-வது வீரருக்கான வரிசையில் அம்பத்தி ராயுடு, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடையே போட்டி நிலவும். 4-வது சிறப்பு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய முடிவு செய்தால் உமேஷ் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா.

இதேபோல் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் இன்று அறிவிக்கப்படுகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.