Latest News
அதிகாரிகள் மெத்தனத்தால் உயிரிழப்பு: ஐகோர்ட் வேதனைஇந்தியாவின் பொருளாதாரம் பலவீனம் : ஐஎம்எப்60 வயதுக்கு பிறகு கிடைக்கும்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் புதிய திட்டத்தை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்நாடு முழுவதும் வங்கிகள் இணைப்பை எதிர்த்து: அதிகாரிகள் 2 நாள் வேலைநிறுத்தம் - 25-ந்தேதி நள்ளிரவு முதல் நடக்கிறதுபற்றி எரியும் அமேசான் காடு: காட்டுத்தீயை அணைக்க களத்தில் இறங்கிய அதிபர்மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்காஷ்மீர்: அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தகவல்வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

0

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதால், ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம் வருமாறு:- ஆரோன் பிஞ்ச் (கேப்டன்) டேவிட் வார்னர், உஸ்மான் காவ்ஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளேன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், நாதன் கல்டர் நைல், ஜேசன் பெண்டோர்ப், அடம் சம்பா, நாதன் லயன்,

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.