Latest News
மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டிதிமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிகுடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல்தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதிகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துஉத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம்அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனைதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கைமேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம்கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

களவாணி 2 ரிலிஸ் பிரச்சனையில் புதுத்திருப்பம் ! – தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம் !

0

களவாணி 2 படத்தின் ரிலிஸுக்கு நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ள நிலையில் படத்தின் இயக்குனர் சற்குணம் கூறிய குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கமளித்துள்ளார்.

கிராமத்துப் படம் என்றாலே கோயம்புத்தூர், மதுரை, தேனி என்று இருந்த தமிழ் சினிமா வழக்கத்தை மாற்றி தஞசாவூர் கிராமத்து வாழ்க்கையை அசலாக பதிவு செய்தப் படம் களவாணி. இதனை புதுமுக இயக்குனரான சற்குணம் இயக்க விமல், ஓவியா, சரண்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது தயாராகியுள்ளது.

ரிலிஸூக்கு தயாராக உள்ளநிலையில் இப்படத்திற்கு ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ‘களவாணி 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜூன் 10 ஆம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து படத்தின் இயக்குனரான சற்குணம் வீடியோ ஒன்றின் மூலம் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ படத்துக்குத் தடை வாங்கியுள்ளவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. இது குறித்து தயாரிப்பாளரிடம் கேட்டபோது அது விமல் சம்மந்தமான பிரச்சனையாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். விமலுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சினை என்பது எனக்குத் தெரியாது. நீதிமன்றத்தின் மீது நான் அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளேன். எனக்கான நீதியையும் நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு தயாரிப்பாளர் சிங்காரவேலன் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் ‘ நடிகர் விமல் என்னிடம் அவர் தயாரித்த மன்னர் வகையறா படத்திற்காக 3 கோடி ரூபாய் கடன் வாங்கினார். ஆனால் நீண்ட காலமாக அதைத் திருப்பி தராமல் ஏமாற்றி வந்தார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் விழாவின் போது களவாணி 2 படம் தயாரிக்கப்போவதாகவும், அதற்காக பண உதவியை செய்தால் மன்னார் வகையறா மற்றும் களவாணி 2 படத்திற்காக வாங்கிய மொத்தக் கடனையும் திருப்பித்தருவதாகக் கூறினார். நான் களவாணி 2 படத்தை முதல் காப்பி அடிப்படையில் எனக்குத் தயாரித்துத் தர வேண்டும் என விமல் மற்றும் சற்குணம் இருவரிடமும் கூறினேன். ஆனால் இப்போது படவேலைகள் முடிந்து ரிலிஸுக்கு தயாரான போது படத்தை தன் பெயரில் ரிலிஸ் செய்ய முயற்சி செய்கிறார் சற்குணம். இது பற்றி நான் எச்சரிக்கை செய்தும் இருவரும் பதில் கூறாததால் நீதிமன்றத்தை அனுகி தடை பெற்றுள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

இதனால் களவாணி 2 படவிவகாரம் இன்னும் சிக்கலாகியுள்ளது. இது சம்மந்தமான விசாரணை ஜூன் 10 ஆம் தேதி வர இருக்கிறது. அதுவரை படத்டஹி ரிலிஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.