Breaking News
லீக்கானது “தர்பார்” ஷூட்டிங் வீடியோ! ரஜினியுடன் மாஸ் காட்டும் யோகி பாபு!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “தர்பார்” படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்பையில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கூட ரஜினி படப்பிடிப்பிற்காக மும்பை சென்றிருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் வைரலானது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா தாமஸ் மற்றும் யோகி பாபு இடம்பெற்றுள்ளனர். இந்த ஷூட்டிங் நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் தோளில் கைபோட்டு ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.