Breaking News
“130 ஆண்டுகள் நிறைவடைந்த ஈபிள் டவர்” மின்னொளியில் ஜொலித்தது : அரசு கோலாகல கொண்டாட்டம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவர் உலக சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 1889-ஆம் ஆண்டு இதே நாளில் தான் ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

1887 ஆம் ஆண்டு ஈபிள் டவரை வடிவமைக்க தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் சுமார் 2 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்கு பிறகு தான் முடிவு பெற்றதாக கூறப்படுகிறது. சுமார் 10 ஆயிரம் டன் எடைக்கொண்ட ஈபிள் டவர், 324 மீட்டர் உயரம் கொண்டது.

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் ஈபிள் டவர் 6 இன்ச் வளர்கிறது என்றும் குளிர்காலங்களில் அதே அளவு சுருங்குவதாகவும் கூறுகின்றனர். காற்று பலமாக வீசும் போது டவரின் உச்சிப் பகுதி 6 லிருந்து 7 மீ. வரை முன்னும் பின்னும் அசையும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈபிள் டவர் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து 41 வருடங்களாக உலகிலேயே மிக உயர்ந்த கட்டிடம் அல்லது கோபுரம் என்ற பெருமையை ஈபிள் டவர் பெற்று வருகிறது.

இந்த கோபுரம் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை அந்நாட்டு அரசு நேற்று கொண்டாடியது. ஈபிள் டவரில் வண்ணமயமான லேசர் விளக்கு நிகழ்ச்சியை பலர் ஆர்வமாக கண்டு ரசித்தனர். பிரான்ஸ் நாட்டின் அடையாளமாக விளங்கும் உலகப்புகழ் பெற்ற ஈபிள் டவர் 130 வது ஆண்டு பிறந்த நாளை அந்நாட்டு அரசு கோலாகலமாக கொண்டாடியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.