நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கமல்ஹாசனின் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

0

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கமல்ஹாசனின் பேச்சு குறித்து எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவிக்காமல் இருந்தால் நல்லது என மதுரை ஐகோர்ட் கிளை கூறி உள்ளது. அதனால் நான் கருத்து கூற இயலாது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் நிலவும் குடி நீர் தட்டுப்பட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முன்பே இது குறித்து ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அரசின் தலையீடு இருப்பதாக கூறுவது தவறு.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.