Breaking News
இந்தியாவுடனான வர்த்தக வேற்றுமைகளை தீர்க்க வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு தயார்; அமெரிக்கா

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தி அடைந்து இருக்கிறார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியொன்றில், பிரதமர் நரேந்திர மோடி எனது நல்ல நண்பர். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்?

அமெரிக்க மோட்டார் சைக்கிள் மீது 100 சதவீத வரி விதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏராளமாக மோட்டார் சைக்கிள்களை தயாரித்து இங்கே அனுப்புகிறார்கள். அவற்றின் மீது நாம் வரி போடுவதில்லை.

எனவே நான் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து இதுபற்றி பேசினேன். இதை ஏற்க முடியாது என்று சொன்னேன். அந்த தொலைபேசி அழைப்பால் 50 சதவீத வரியை குறைப்பதாக மோடி கூறினார். ஆனால் இதையும் ஏற்க முடியாது, ஏனென்றால் நாம் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை என்பதை குறிப்பிட்டேன். இப்போதும் அதை ஏற்க முடியாது. அவர்கள் இதை பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எல்லாரும் கொள்ளையடிக்க விரும்புகிற வங்கி போல அமெரிக்கா இருக்கிறது. இதைத்தான் அனைவரும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளால் நமக்கு 800 பில்லியன் டாலர் (சுமார் ரூ.56 லட்சம் கோடி) வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது என கூறினார்.

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ, இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு வருகிற 24ந்தேதி முதல் 30ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளை பற்றி பேசிய அவர், வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தொடர்ந்து தயாராக இருக்கிறோம். இந்தியாவில் உள்ள எங்களுடைய நண்பர்கள் வர்த்தக தடைகளை கைவிடுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். வர்த்தக போட்டியில் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று கூறினார். என்னுடைய இந்திய வருகையில், ஜி.எஸ்.பி. முடிவு பற்றி ஆலோசிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு உறவுகள் பற்றி பேசிய அவர், எங்களுடைய பாதுகாப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டு உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம் என்று கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.