Breaking News
உங்க பேட் தான் அவுட்டுக்கு காரணம் : கண்டுபிடித்த டோனி – கோபத்தில் கோலி

நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி, இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்ததிலேயே மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இதில் எப்போதும் போல இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தியது.

இந்த வெற்றி மூலம் தொடர்ந்து 7-து முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. இது இந்திய ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய வீரர்கள் எல்லோரும் மிகவும் அதிரடியாக ஆடினார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. கேஎல் ராகுல் 78 பந்துகளில் பொறுமையாக 57 ரன்கள் அடித்தார்.

ரோகித் சர்மா மொத்தம் 113 பந்துகளில் 140 ரன்கள் அடித்தார். கோலி 65 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார். மொத்தம் 50 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட்டிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. போட்டியில் மழை குறுக்கிட்டது. பாகிஸ்தான் விளையாடும் போதும் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி 40 ஓவராக குறைக்கப்பட்டது .

40 ஓவரில் 212 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

விராட் கோலி நேற்று மிகவும் அதிரடியாக ஆடி வந்தார். இவர் 65 பந்தில் 77 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விராட் கோலி 77 ரன்கள் எடுத்து பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது அமிர் பந்தில் அவுட்டாகி வெளியே சென்றார்.

ஆனால் உண்மையில் அவர் அந்த பந்தில் அவுட்டாகவில்லை. பந்து பேட்டில் பட்டதாக நினைத்து வெளியேறினார். நடுவர் அவுட் கொடுக்காமலே இவர் அவுட் என்று நினைத்து வெளியேறினார். பந்து அவர் பேட்டை கடந்து சென்ற போது டொக் என்று சத்தம் கேட்டது. அதேபோல் கோலியின் பேட்டும் லேசாக அதிர்ந்தது. இதனால் பேட்டில் பந்து பட்டதாக அவர் நினைத்தார். ஆனால் உண்மை என்னவென்றால் ரிப்ளேயில் கோலி அவுட் இல்லை என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கோலி பெவிலியன் சென்ற பின் அவரின் பேட்டை தோனி வாங்கி சோதனை செய்து பார்த்தார். அதன் பின் கோலியின் பேட்டில் ஹேண்டில் லூஸாக இருக்கிறது. அதனால் சத்தம் வருகிறது, அதனால்தான் பேட் ஆடியது என்பதை கண்டுபிடித்து தோனி குறிப்பிட்டார்.

இதை பின் கோலியும் சோதித்து பார்த்தார். கோலி மீண்டும் பேட்டை ஆட்டும் போது இதேபோல் சத்தம் வந்தது. இதைத்தான் அவர் பந்து பட்டது என்று நினைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த கோலி பேட்டை தரையில் சாத்து சாத்து என்று சாத்தி அடித்து உடைத்தார். இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியானது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.