Breaking News
கொட்டாவி விட்ட கேப்டன் கோட்டை விட்ட வெற்றி ; மூளையில்லாத கேப்டன் வறுத்தெடுத்த ஷோயிப் அக்தர்!!

நேற்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து, 337 ரன்கள் என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. கடின இலக்கை அடைய முடியாமல் போராடிய பாகிஸ்தானின் ஆட்டம் மழையால் தடைபட்டு, பின்னர் விளையாடி விதிப்படி இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ப்ராஸ் அகமது மைதானத்தில் கீப்பிங் செய்தபடியே, கொட்டாவி விட்டு கொண்டிருந்தார். அவரது அனிச்சையான இந்தச் செயலை நெட்டிசன்கள் தற்போது சகட்டுமேனிக்கு கலாய்த்து வருகின்றனர்.

உலக கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இம்ரான்கான் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தார்.

கடைசி பந்து வரை போராடும் படியும், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யுமாறும் அவர் கேட்டு இருந்தார்.

ஆனால் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது இம்ரானின் அறிவுரையை நிராகரித்தார். டாஸ் வென்ற அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையும் விமர்சித்து உள்ளனர்.

‘மூளையில்லாத கேப்டன் மற்றும் துப்பு இல்லாத மேலாண்மை’ என பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்துள்ளனர். இதுகுறித்து ஷோயிப் அக்தர் கூறியதாவது:-

முதலில் பீல்டிங் தேர்ந்தெடுத்ததன் மூலம் பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு செய்தது. பாகிஸ்தான் 260-280 ரன்கள் எடுத்திருந்தாலும், ஸ்கோர்போர்டு அழுத்தம் காரணமாக இந்தியா அதைத் துரத்துவது கடினமாக இருந்திருக்கும்.

இந்த போட்டி 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் கண்ணாடிப் படம் போன்றது. அன்றைய தினம் இந்தியா செய்த அனைத்து தவறுகளையும் பாகிஸ்தான் செய்தது.

ஹசன் அலியின் திறனையும் நோக்கத்தையும் அக்தர் கேள்வி எழுப்பி உள்ளார் . வாகா எல்லையில் உரத்த அறிக்கைகளை வெளியிடுவது மட்டுமே உதவாது என்றும் அதை களத்திலும் காட்ட வேண்டும் என்றும் கூறினார்.

வாகா எல்லையில் இந்தியாவை நோக்கி கோபமான சைகைகளைச் செய்தபோது ஹசன் அலி சர்ச்சையை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.