Latest News
பொருளாதார சரிவில் இருந்து மீள மத்திய அரசு அதிரடி நடவடிக்கை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புபெண் குழந்தை பெற்ற மனைவிக்கு முத்தலாக் வழங்கிய கணவஅமலாக்கப்பிரிவு வழக்கில் 26-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுஅமெரிக்காவில் வீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி வென்ற சிறுவன்3 கோடி சந்தாதாரர்களுடன் யூ-டியூப்பில் பிரபலம்: 6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடிகர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த் மாயம்வனப்பகுதியில் படமாக்கப்பட்ட சாகச நிகழ்ச்சியில் மோடி: டிஸ்கவரி சேனலில் ஆகஸ்டு 12-ந் தேதி ஒளிபரப்பாகிறது

‘தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் தூண்டுதலின் பேரில் என் மகனை கைது செய்துள்ளனர்’ மதுரையில் சீனியம்மாள் பேட்டி

0

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேசுவரி கொலை தொடர்பாக தனது மகன் கைது செய்யப்பட்டது குறித்து மதுரையில் சீனியம்மாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் மேயர் உமாமகேசுவரி கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணையாவது நேர்மையாக நடக்க வேண்டும். அரசியல் அழுத்தம் காரணமாகவே எங்கள் குடும்பத்தினர் மீது பழி போட்டுள்ளனர். எனது மகனை போலீசார் எங்கு வைத்துள்ளனர் என்று தெரியவில்லை.

நாளை (அதாவது இன்று) என் மகனின் நிலை குறித்து தெரிவிக்க கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். நெல்லையை சேர்ந்த தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் 2 பேரின் தூண்டுதலின் பெயரிலேயே இந்த கைது நடவடிக்கையும், இந்த பிரச்சினையும் எங்களுக்கு வந்துள்ளது. திரும்பவும் சொல்கிறேன், எனக்கும் உமாமகேசுவரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் நிகழ்ச்சிகளில் மட்டும்தான் நாங்கள் சந்தித்து பேசினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீனியம்மாளின் கணவர் சன்னாசி கூறியதாவது:-

உமாமகேசுவரி உள்பட 3 பேர் கொலை வழக்கில் எனது மகன் கார்த்திகேயன் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. அரசியல் தூண்டுதல் காரணமாகத்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கார்த்திகேயன் நிரபராதி என்பதை சட்டப்படி நிரூபிப்போம்.

என்ஜினீயரிங் படித்த அவனுக்கு ஆந்திராவில் வேலை கிடைத்துள்ளது. எனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் தங்கி உள்ளோம். வருகிற 1-ந் தேதி நெல்லைக்கு சென்ற பிறகு அவனை வேலைக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்தோம். இந்த நேரத்தில் அவனை போலீசார் கைது செய்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.