3 கோடி சந்தாதாரர்களுடன் யூ-டியூப்பில் பிரபலம்: 6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி

0

தென் கொரியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமியான போரம் 2 யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறாள். அதில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து மதிப்பாய்வு (ரிவ்யூ) செய்து, வெளியிடுவது தான் போரமின் பணி.

மழலைக்குரலில் அவள் கூறும் ரிவ்யூவை கேட்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதன் மூலம் 3 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டு யூ-டியூப்பில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் போரம்.

இந்தநிலையில் போரமின் யூ-டியூப் சேனல் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு அவளது பெற்றோர் தலைநகர் சியோலில் 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.55 கோடி) 5 மாடிகளை கொண்ட வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்கள்.

இது அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும், அபார வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்பது குறித்து யூ-டியூப் நிபுணர்கள் கூறுகையில், “போரமின் யூ-டியூப் சேனல்களுக்கு மொத்தம் 3 கோடியே 10 லட்சம் சந்தாதாரர்கள் இருப்பதால் அவள் மாதம் 3.1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.21 கோடி) சம்பாதிக்கிறாள்” என தெரிவித்துள்ளனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.