உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரால் விறுவிறுப்பு அதிகரிக்கும் – விராட்கோலி கருத்து

0

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நாளை மறுநாள் (1-ந் தேதி) தொடங்குகிறது. இந்த போட்டி தொடரில் இருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரும் ஆரம்பமாகி விடுகிறது. இந்த தொடர் முதல் ஒவ்வொரு நாடுகளின் டெஸ்ட் போட்டி தொடரின் முடிவுகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி புள்ளிகளாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் பங்கேற்கும் அணிகளாகும். ஒவ்வொரு அணியும் 6 அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டி தொடரில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் விளையாட வேண்டும். உள்ளூர், வெளியூர் அடிப்படையில் இந்த டெஸ்ட் போட்டி தொடர் இருக்கும். ஒவ்வொரு தொடரின் முடிவுக்கு தகுந்தபடி அணிகளுக்கு புள்ளிகள் கிடைக்கும். லீக் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி இங்கிலாந்தில் 2021-ம் ஆண்டில் ஜூன் மாதம் நடக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் அங்கமாக இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட்இண்டீஸ் சென்று அந்த அணியுடன் 2 டெஸ்ட் போட்டியிலும், அக்டோபர் மாதத்தில் உள்ளூரில் தென்ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டியிலும், நவம்பர் மாதத்தில் உள்ளூரில் வங்காளதேசத்துடன் 2 டெஸ்ட் போட்டியிலும், அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதத்தில் நியூசிலாந்து சென்று அந்த நாட்டு அணியுடன் 2 டெஸ்ட் போட்டியிலும், 2020-ம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆஸ்திரேலியா சென்று அந்த நாட்டு அணியுடன் 4 டெஸ்ட் போட்டியிலும், 2021-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் உள்ளூரில் இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. ஒரு போட்டி தொடரில் ஒரு அணி அதிகபட்சமாக 120 புள்ளிகள் பெற முடியும்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரை எதிர்கொள்ள ஆர்வமாக காத்து இருக்கிறோம். இந்த போட்டி தொடர் டெஸ்ட் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும். பாரம்பரியமும் மிகுந்த சவாலும் மிக்க டெஸ்ட் போட்டியில் முதன்மையான இடத்தை பிடிப்பது எப்பொழுதும் அதிக திருப்தியை அளிக்கும். சமீபகாலங்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நமது அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்’ என்றார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.