மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்

0

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருக்கிறது. இதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அனேக இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புண்டு.

அதிகபட்ச மழை

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் திருவள்ளூரில் அதிகபட்சமாக தலா 4 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, செம்பரம்பாக்கம், திருவலங்காடு, பூந்தமல்லி மற்றும் சோழவரத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. நீலகிரி மாவட்டம் தேவலா, காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரம், கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் தர்மபுரியில் 2 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.