Breaking News
அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாக்.கிற்கு எதிராக திரும்பியுள்ளனர்: இம்ரான்கான்

அமெரிக்காவின் முரண்பட்ட நிலையால் பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவை சாடியுள்ளார். இம்ரான் கான் மேலும் கூறுகையில், “ 1980 களில் சோவியத் ரஷ்யா ஆதிக்கத்தில் இருந்த ஆப்கானிஸ்தானை மீட்க முஜாகிதீன் அமைப்பினருக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது. இந்த பயிற்சிக்கு அமெரிக்காவின் சிஐஏ நிதி உதவி கொடுத்தது.

தற்போது, பாகிஸ்தானில் உள்ள அதே குழுக்களை பயங்கரவாதிகள் என்று, ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவதால் அமெரிக்கா கூறுகிறது. இது மிகப்பெரிய முரணாகும். பாகிஸ்தான் இந்த பிரச்சினையில் நடுநிலை வகித்து இருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். ஏனெனில், இந்த விஷயத்தில் தலையிட்டதால், தற்போது அதே குழுக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளன.

பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் 70 ஆயிரம் பேரையும் 100 பில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் இழந்துள்ளது. இறுதியில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் வெற்றி பெறாததற்கு நாங்கள் குற்றம் சாட்டப்பட்டோம். இது முற்றிலும் நியாயமற்றது என்று நான் கருதுகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.