Breaking News
விஜய் படப்பிடிப்பு தொடங்கியது

விஜய்க்கு 64-வது படம். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இதில் மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.
இது விஜய்க்கு 64-வது படம் ஆகும். கதாநாயகியாக நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தவர். அவர் கூறும்போது “நான் விஜய்யின் தீவிர ரசிகை. அவருடன் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா? நண்பனாக வருகிறாரா? என்பதை படக்குழுவினர் வெளியிடவில்லை. இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல். பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதில் விஜய் பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் உள்ள திரைப்பட நகரில் நேற்று தொடங்கியது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படம் அடுத்த வருடம் கோடையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.