சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்க உள்ள கிண்டி கிராண்ட் சோழா ஓட்டலில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு

0

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று வர இருப்பதையொட்டி, சென்னை நகரம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச இருக்கும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இரு தலைவா்களுக்கு இடையிலான சந்திப்பு, அலுவல்சாரா சந்திப்பு என்பதால் சந்திப்பில் பேசப்படும் விஷயங்கள் பட்டியலிடப்படவில்லை. இந்தச் சந்திப்பில் பங்கேற்க சீன அதிபா் ஜி ஜின்பிங் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி நண்பகல் 12.30 மணிக்கு சென்னை வரவுள்ளார்.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கும் சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மோப்ப நாய் உதவியுடன் அவர் ஆய்வில் ஈடுபட்டார்.

சென்னை விமான நிலையம் – கிண்டி இடையே உள்ள சாலையோர நடைபாதையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீன அதிபர் வருகையையொட்டி பகல் 1.30 மணி முதல் சென்னை விமானநிலையம் முதல், ஐ.டி.சி. வரையான போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.