ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘காப்பான்’

0

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘காப்பான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்து ஊடக நண்பர்களுக்கும்‌.. எங்கள்‌ மகிழ்வான வணக்கம்‌.

எங்கள்‌ இதயங்களில்‌ நிறைவும்‌, உதடுகளில்‌ புன்னகையும்‌ உங்களால்‌ சாத்தியமாகியிருக்கிறது. ஒரு படத்தின்‌ வெற்றி என்பது சகஜமானது. ஆனால்‌ சாதனை வெற்றியென்பது அபூர்வமானது.

எங்கள்‌ லைகா நிறுவனத்தின்‌ தயாரிப்புகளில்‌ நற்பெயரும்‌, நல்ல வசூலும்‌ தேடித்‌ தந்தது காப்பான்‌ திரைப்படத்தின்‌ முதல்‌ சாதனை. கேரளாவிலும்‌, அயல்‌ நாடுகளிலும்‌ அதிரிபுதிரியான வசூல்‌ கொண்டாட்ட சாதனை.

மொத்த வசூலில்‌ 100 கோடியைத்‌ தொட்ட படங்களின்‌ பட்டியலில்‌ காப்பானும்‌ சேர்ந்ததும்‌ முக்கிய சாதனை. தமிழக விவசாய அமைப்புகள்‌ அனைத்திலிருந்தும்‌ ஏகோபித்த பாராட்டுக்களைப்‌ பெற்றது மகத்தான சாதனை. அத்தனைத்‌ தரப்பு ரசிகர்களிடமிருந்தும்‌ குவியும்‌ பாராட்டுக்கள்‌ இன்னுமொரு சாதனை.

இத்தனை சாதனைகளுக்கும்‌ காரணமாய்‌ இருந்த காப்பானின்‌ அத்தனை நடிகர்களுக்கும்‌, தொழில்நுட்பக்‌ கலைஞர்களுக்கும்‌, திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும்‌, திரையரங்க உரிமையாளர்களுக்கும்‌, இந்த வெற்றியை அங்கீகரித்த ரசிகர்களுக்கும்‌ எங்கள்‌ நெஞ்சார்ந்த நன்றி.

ஆதரவாய்‌ இருந்த, ஆழமாய்‌ ரசனையாய்‌ விமரிசித்த ஊடக நண்பர்களான உங்களுக்கும்‌ எங்கள்‌ இதயப்பூர்வமான நெகிழ்ச்சி கலந்த நன்றி. லைகா நிறுவனம்‌ தனது அடுத்தடுத்த பெரிய திரைப்பட முயற்சிகளை கம்பீரமாகத்‌ தொடர.. நல்ல நம்பிக்கையை விதைத்திருக்கும்‌ காப்பான்‌ படக்‌ குழுவினருக்கு மீண்டும்‌ நன்றி.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.