Breaking News

அதிமுகவில் இருந்து கணிசமான எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சி அமைக்க முடியுமா என்பது குறித்து திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான அதிமுகவில் பிளவு ஏற்பட்டு ஓபிஎஸ் அணியில் 7 எம்எல்ஏக் கள், 11 எம்.பி.க்கள் இணைந்துள் ளனர். மற்ற அதிமுக எம்எல்ஏக் கள் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.

பெரும்பான்மை எம்எல்ஏக் களின் ஆதரவு இருப்பதால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரை நேரில் சந்தித்து சசிகலா கோரிக்கை விடுத் தார். ஆனாலும் 5 நாட் களாக ஆளு நர் எந்த முடிவையும் எடுக்க வில்லை. மேலும், சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ள நிலையில், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற் றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். கூட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின், நடப்பு அரசியல் சூழலை விளக்கி என்ன செய்யலாம் என கேட்டுள்ளார்.

கூட்டத்தில் பேசிய மூத்த தலைவர் ஒருவர், ‘‘அதிமுகவில் தற்போது அதிகாரப் போட்டி தீவிரமாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமாக வந்தால் சசிகலா முதல்வராகி விடுவார். எதிராக வந்தால் ஓபிஎஸ் பக்கம் பல எம்எல்ஏக்கள் வருவார்கள். ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்கள் கிடைப்பது கடினம். எனவே, கணிச மான அதிமுக எம்எல்ஏக்களை இழுத்து மு.க.ஸ்டாலின் தலைமை யில் ஆட்சி அமைக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.

விரைவில் தேர்தல் வரும்

அதற்கு சிலர், ‘‘தற்போதைய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் தயவில் ஆட்சி அமைத்தால் திமுக வின் செல்வாக்கு சரிந்துவிடும். சசிகலா, ஓபிஎஸ் யார் ஆட்சி அமைத்தாலும் 6 மாதங்கள் அல் லது ஓராண்டுகூட தாக்குப் பிடிக் காது. எனவே, விரைவில் தேர்தல் வரும் வகையில் திமுகவின் வியூகங்கள் அமைய வேண்டும்’’ என பேசியுள்ளனர்.

‘‘இன்னும் நான்கரை ஆண்டு கள் ஆட்சி எஞ்சியிருப்பதால் உடனடியாக தேர்தலை சந்திக்க எம்எல்ஏக்கள் விரும்ப மாட்டார் கள். எனவே, ஸ்டாலின் தலைமை யில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளை நாமே உருவாக்க வேண்டும். நாம் களத்தில் இறங் கினால் எதையும் சாதிக்க முடியும். தலைமையின் உத்தரவு கிடைத்தால் 20 எம்எல்ஏக்களை இழுப்பது பெரிய விஷயம் இல்லை’’ என முன்னாள் அமைச் சர்கள் சிலர் பேசியுள்ளனர்.

திமுக ஆட்சி அமைப்பதற்கான சூழல் உள்ளதா? ஆட்சி அமைக் கத் தேவையான எம்எல்ஏக்களை திமுக பக்கம் கொண்டுவர முடி யுமா? அதிமுக எம்எல்ஏக்களை இழுத்தால் மக்கள் நம்மை எப்படிப் பார்ப்பார்கள்? என்பது பற்றியெல்லாம் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

திமுகவின் எதிரிகளே..

கூட்டம் முடிந்ததும் செய்தியா ளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘மக்களைப் பற்றி கவலைப்படா மல் அதிமுகவில் பதவிச் சண்டை ஏற்பட்டுள்ளது. கொள்ளையடிப்ப தற்காக அதிகாரத்தை கைப் பற்றத் துடிக்கின்றனர். ஓபிஎஸ் பின்னால் திமுக இருப்பதாக தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஓபிஎஸ், சசிகலா இருவரும் திமுக வின் எதிரிகளே. சட்டப்பேர வையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது யாருக்கு வாக்க ளிப்பது என்பதை முடிவு செய் வோம். தமிழகத்தில் நிலையான அரசை அமைக்க ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.