Breaking News
ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை 1971-ம் ஆண்டு போராட்டத்தில் கலந்துகொண்ட லட்சுமணன் பேட்டி

பா.ஜனதா மூத்த தலைவரும், 1971-ம் ஆண்டு பெரியார் ஊர்வலத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பாரதீய ஜனசங்கத்தின் அப்போதைய சேலம் மாவட்ட தலைவருமான லட்சுமணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

1971-ம் ஆண்டு பெரியார் தலைமையில் மாட்டுவண்டியில் நடந்த ஊர்வலத்தில் ராமர், கிருஷ்ணர், முருகன் உள்ளிட்ட சாமி படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததுடன் தகாத வார்த்தைகளால் கோஷமிட்டவாறு பலர் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது செருப்பு மாலை அணிவித்தவர்களுக்கு எதிராக தான் நாங்கள் போராட்டத்தை நடத்தினோம். அப்படி இருக்கும் போது நாங்கள் எப்படி செருப்பு மாலையை வீச முடியும்.

பெரியார் இயக்கத்தை சேர்ந்தவர்கள் செருப்பு மாலை அணிவிப்பது மற்றும் வீசுவது தவறு என்று தற்போது உணர்ந்துள்ளனர். இவர்களின் மனமாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரியார் ஊர்வலம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தில் தவறு கிடையாது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டியதும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.