மது அருந்தும் போட்டியில் வெற்றி பெற்றவர் ரத்த வாந்தி எடுத்து சாவு

0

உத்தரபிரதேச மாநிலம் உகான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர சிங். இவர் தனது உறவினர் பிரதீப் என்பவரது வீட்டுக்கு சென்றார். அங்கு மது குடிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே போட்டி நடந்தது. 20 நிமிடத்துக்குள் யார் 4 ‘குவார்ட்டர்’ பாட்டில்களை குடிக்கிறாரோ அவர்தான் வெற்றியாளர். தோல்வி அடைபவர், 2 பேருக்கான 8 குவார்ட்டர் பாட்டில்களுக்கான பணத்தை கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தனர். போட்டி ஆரம்பித்த 10 நிமிடத்திலேயே ராஜேந்திர சிங் 4 குவார்ட்டர் பாட்டில்களையும், தண்ணீர் உள்ளிட்ட எந்த பானமும் கலக்காமல் குடித்து முடித்து போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்த உற்சாகத்துடன் அவர் தனது வீட்டுக்கு வந்து படுத்தார். ஆனால், ஒரு மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த ராஜேந்திரசிங் துடி, துடித்து இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.