பிரதமர் மோடியின் எல்லை பிரச்சினை தொடர்பான உரையை நீக்கிய சீன சமூக ஊடகம்

0

இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் மிகப்பெரிய மோதல் நடந்தது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா- சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சினை தொடர்பான பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்த கருத்துக்கள், சீன சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சீனாவில் வெய்போ மற்றும் வி-சாட் ஆகிய செயலிகள் பொதுமக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை சீனாவின் பிரபல சமூக ஊடக செயலியான வி-சாட் நீக்கியுள்ளது. இதுகுறித்து அந்த சமூக ஊடகம் சார்பில் தெரிவிக்கையில், “அரசு ரகசியங்களை தெரிவிக்கக்கூடாது. தேச பாதுகாப்புக்கு ஆபத்து நேர விடக்கூடாது என்ற காரணத்தால் இந்த பதிவுகளை நீக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளது.

முன்னதாக இந்தியாவின் அதிகாரப்பூர்வ கணக்கில் வெளியான இந்திய – சீன எல்லை நிலவரம் பற்றிய மோடியின் கருத்துகள், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை மந்திரி இடையே நடைபெற்ற தொலைபேசி வழி உரையாடல், வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரின் அறிக்கை போன்றவை வி-சாட் சமூக ஊடகம் முன்னதாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.