Latest News
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சைவிமானப்படையின் 3 நாள் மாநாடு தொடங்கியதுதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் - தலைமை செயலாளர் இன்று ஆலோசனைகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை; கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றிமும்பை இந்தியன்சுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் ஹர்சல் பட்டேல்அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் - இதுவரை 5 பேர் கைதுமார்ச் மாதத்துக்கான ஐ.சி.சி.விருது பட்டியலில் புவனேஷ்வர்குமார்ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயார்; அமெரிக்கா அறிவிப்புகாஷ்மீரில் அடுத்தடுத்து என்கவுண்ட்டர்; 5 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் விலகல்

0

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபிஎல் தொடருக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் பல்வேறு அணியை சேர்ந்த வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவை வேகப்பந்து வீச்சாளர் ஜேஷ் ஹேசில்வுட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர், இன்னும் சிலநாட்களில் இந்தியாவுக்கு வந்து சென்னை அணியுடன் இணைந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ஜோஷ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளதால் அடுத்த 2 மாதங்களுக்கு குடும்பத்துடன் சற்று ஓய்வெடுக்க விரும்புவதாக ஹேசில்வுட் தெரிவித்துள்ளார். டி 20 உலகக்கோப்பை தொடர், ஆஷிஸ் தொடர் உள்ளிட்ட போட்டிகளை கருத்தில் கொண்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தயாராக இந்த ஓய்வு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டின் விலகல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஹேசில்வுட்டிற்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.