Breaking News
ஆஸ்துமா மற்றும் அலர்ஜியைக் கட்டுப்படுத்த புது மருந்து!

நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய விஞ்ஞானி பாரி மார்ஷல் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியைக் முற்றிலும் கட்டுப்படுத்த புது மருந்து ஒன்றைக் கண்டறிந்துள்ளாராம். இந்த மருந்தை மாத்திரைகள், பொடிகள், அல்லது சிரப்புகளாக எடுத்துக் கொள்ளலாம். ‘இம்பேலன்ஸ் எனும் பெயர் கொண்ட இந்த மருந்து நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துவதை தவிர்த்து நோயின் தாக்கத்தை மட்டுமே குறைக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளதாம்.

பாரி மார்ஷல் அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்தில் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர். 2005 ஆம் ஆண்டில் உடலியல் பிரிவில் வயிற்றுப் புண் தொடர்பான ஆராய்சிக் கட்டுரை சமர்பித்ததற்காக அந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அந்த ஆராய்சியின் நீட்சியில் பாரி இந்த மருந்தைக் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

தனது புதிய மருந்து குறிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் பாரி மார்ஷல் தெரிவித்தது யாதெனில் “மருந்துகள் நோயின் கடுமையைக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர உடலில் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துவனவாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிறகு எந்த நோயிலிருந்தும் நம்மால் மீளவே முடியாமல் போகும்” என்றார்.

கடந்த 7 ஆண்டுகளின் கடின உழைப்பின் பலனாக இந்த மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 100 % பாதுகாப்பான இந்த மருந்து நிச்சயம் உங்களது உடலில் நோய் தடுப்பாற்றல் அமைப்பை நீக்காது. குழந்தைகளுக்கு உணவிலோ, பானங்களிலோ கலந்து கூட இந்த மருந்தை உட்கொள்ளச் செய்யலாம்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.