Latest News
அரசு, தனியார் பேருந்துகள் ஓடாது- முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றிய முழு விவரம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகைப்படம்மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்துபிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர்மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜிநாடு முழுவதும் ஊரடங்கு...? மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனைஇந்தியாவில் 3 நாட்களுக்குப் பிறகு சற்று உயர்ந்த கொரோனா பாதிப்புகவர்னரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின்

மும்பை இந்தியன்சுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் ஹர்சல் பட்டேல்

0

சென்னை,

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டம் ரசிகர்கள் இன்றி சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் களம் கண்டன.

இதில், டாஸ் வென்று பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் (வயது 30) அதிரடியாக பந்து வீசினார். அவர் தனது 16வது ஓவரில் அதிரடி ஆட்டக்காரர் ஹர்தீக் பாண்ட்யாவை வெளியேற்றினார்.

இதேபோன்று மற்றொரு அதிரடி வீரரான இஷான் கிஷான் 18வது ஓவரில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இத்துடன் பட்டேல் நின்றுவிடவில்லை. ஆட்டத்தின் இறுதி ஓவரில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். பட்டேல் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். அவர் இன்னிங்சின் இறுதி ஓவரை வீசி குருணல் பாண்ட்யா, மார்க்கோ ஜேன்சென், கீரன் பொல்லார்டு ஆகியோரை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

முதல் இரண்டு பந்து வீச்சில் குருணல் மற்றும் பொல்லார்டு ஆட்டமிழந்தனர். இதனால் ஆட்டத்தில் சூடு பிடித்தது. அதன்பின்னர் ஜேன்சென் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜஸ்பிரீத் பும்ரா ஓவரின் இறுதி பந்தில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க செய்யப்பட்டார்.

இதனால், மும்பை அணி 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ஐ.பி.எல். போட்டிகளில் நடப்பு சாம்பியன்சான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ஹர்சல் பட்டேல் பெற்றுள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.