Latest News
சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு: ரெயில்வே கோட்டம் அறிவிப்புஇஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தாலி பென்னெட் பொறுப்பேற்பு - நெதன்யாகு ஆட்சிக்கு முடிவுஅரசு, தனியார் பேருந்துகள் ஓடாது- முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றிய முழு விவரம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகைப்படம்மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்துபிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர்மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜிநாடு முழுவதும் ஊரடங்கு...? மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை

சர்க்கரை நோயாளிகளுக்கான… சோயா மெத்தி சப்ஜி

0

சோயா மெத்தி சப்ஜி ஒரு எளிமையான ஒரு சப்ஜி. இது வெந்தயக் கீரை மற்றும் மீல் மேக்கர் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி. இது ஒரு அற்புதமான சைடு டிஷ் கூட. வெந்தயக் கீரை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மீல் மேக்கரில் புரோட்டீன் அதிகமாக உள்ளது மற்றும் இது சுவையானதும் கூட. இந்த இரண்டையும் சேர்த்து செய்யப்படும் சோயா மெத்தி சப்ஜி சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற ஒரு ஆரோக்கியமான ரெசிபி.
இந்த சோயா மெத்தி சப்ஜி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கீழே சோயா மெத்தி சப்ஜி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மெத்தி/வெந்தயக் கீரை – 1 கப் (பொடியாக நறுக்கியது)
* மீல் மேக்கர் – 1 கப்
* கடுகு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)
* பிரியாணி இலை – 1
* பட்டை – 1 இன்ச்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
* மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
* பொடித்த வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* முதலில் மீல் மேக்கரை நன்கு கொதித்த சுடுநீரில் போட்டு நன்கு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உள்ள நீரை வெளியேற்றிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, பிரியாணி இலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.

* பிறகு நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும், அதில் வெந்தயக் கீரையைப் போட்டு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து, அதில் உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் வெல்லத்தை சேர்த்து, அதோடு மீல் மேக்கரையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலா அனைத்தும் மீல் மேக்கரில் ஒன்று சேரும் வரை 3-4 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.

* இறுதியில் உப்பு சுவை பார்த்து இறக்கினால், சுவையான சோயா மெத்தி சப்ஜி தயார்.

குறிப்பு:
* மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு ஊற வைப்பதற்கு பதிலாக, அதை குக்கரில் போட்டு நீரை ஊற்றி, 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளலாம்.
* மாங்காய் தூள் இல்லாதவர்கள், இறுதியில் இறக்கிய பின் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளலாம்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.