Latest News
அரசு, தனியார் பேருந்துகள் ஓடாது- முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றிய முழு விவரம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகைப்படம்மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்துபிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர்மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜிநாடு முழுவதும் ஊரடங்கு...? மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனைஇந்தியாவில் 3 நாட்களுக்குப் பிறகு சற்று உயர்ந்த கொரோனா பாதிப்புகவர்னரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை; கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு

0

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது.

கொரோனாவின் 2-வது அலை
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வீசத் தொடங்கியுள்ளது. முதல் அலையை விடவும் 2-வது அலை காட்டுத் தீ போல வேகமாக பரவி வருகிறது. ஆனாலும்கூட, சிலர் எந்த கவலையும் இன்றி அரசு உத்தரவுகளை மதிக்காமல், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபராதம்
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரையிலும் நீட்டித்ததோடு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு பிறப்பித்தது. அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்து வருவதற்கு இ-பாஸ் கட்டாயம். பஸ் பயணங்களில் நின்றுகொண்டு செல்ல அனுமதி இல்லை. மத வழிபாட்டு தலங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். திரையரங்குகள், ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கிடையே தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இட நெருக்கடி
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எழுச்சியடைந்து வருவதால் பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் இட நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை அளிக்க தேவையான இடவசதிகளை ஏற்படுத்தும் முனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்களின் வளாகங்களை மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றும் பணிகளும் வேகமாக நடக்கின்றன.அந்த வகையில், சென்னையில் பாதிப்பு மோசமாக உள்ளதால் மாநில கல்லூரி விடுதி, அண்ணா பல்கலைக்கழகம், பாரிமுனையில் உள்ள பாரதி கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவன வளாகங்கள் கொரோனா தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெறும் வகையில் வார்டுகளாக மாற்றப்பட உள்ளன.

முதல்-அமைச்சர்அவசர ஆலோசனை
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 6-ந் தேதி சட்டசபை தேர்தல் முடிந்து, அதன் முடிவுகள் அடுத்த மாதம் 2-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளன. தற்போது ‘காபந்து சர்க்கார்’ (முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரையிலும் தற்காலிகமாக பொறுப்பில் இருக்கும் அரசு) ஆட்சியில் இருக்கிறது. இதனால் முதல்-அமைச்சர் எந்தவிதமான முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் நடத்தை விதிகளில் தேர்தல் ஆணையம் சில தளர்வுகளை கொண்டுவந்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்
தற்போதைய தடுப்பு நடவடிக்கைகள் கொரோனாவின் கொட்டத்தை அடக்குவதற்கு பலன் அளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்தவகையில், இன்றைய கூட்டத்தில் விவாதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.