Latest News
அரசு, தனியார் பேருந்துகள் ஓடாது- முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் பற்றிய முழு விவரம்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - புதிய அமைச்சர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் புகைப்படம்மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்துபிரபல குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று காலமானார்கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது - ரிசர்வ் வங்கி ஆளுநர்மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜிநாடு முழுவதும் ஊரடங்கு...? மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனைஇந்தியாவில் 3 நாட்களுக்குப் பிறகு சற்று உயர்ந்த கொரோனா பாதிப்புகவர்னரை இன்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் கட்டுப்பாடுகள் – தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

0

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை,

மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார் கர்நாடகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வரை இதுதான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து 7,819 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,564 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இது மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 சதவீத வளர்ச்சியில் கொரோனா பரவல் உள்ளது.

மேலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றில் பதில் அளித்த தமிழக அரசு, கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்புக்காக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது.

திருமணம், இறுதிச்சடங்கு, மதம் தொடர்பான கூட்டங்கள் உள்பட பல நிலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இரவு நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்துவது; சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது, போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.