Breaking News
சைக்கோ வில்லனாக ஜெய்

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க வருகிறார்கள். விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக வந்தார். கார்த்திக், அர்ஜுன் ஆகியோரும் வில்லன்களாக நடித்துள்ளனர். தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள ஜெய் வில்லனாக மாறுகிறார்.

ஐந்தாம் படை’, ‘வீராப்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பத்ரி பட்டாம்பூச்சி என்ற புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில்தான் ஜெய் வில்லனாக நடிக்கிறார். அவர் சைக்கோ வில்லனாக வருகிறார். இதில் சுந்தர்.சி காவல்துறை அதிகாரி வேடத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஹனி ரோஸ் நடிக்கிறார். 80-களில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்ட படமாக தயாராகிறது.

‘அமைதியான வாழ்க்கை வாழ நினைக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும், தொடர்ந்து பல கொலைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒரு சைக்கோ கொலைகாரனுக்கும் நடக்கும் மோதலே கதை.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.