Breaking News
ஏப்ரல் 5-ம் தேதி ஐபிஎல் தொடக்கம்

ஐபிஎல் டி20 தொடரின் 10-வது சீசன் போட்டிகள் வரும் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 2-வது இடம் பிடித்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இறுதிப் போட்டி மே 21-ம் தேதி ஹைதராபாத்திலேயே நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. 47 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் ஆட்டங்கள் 10 நகரங்களில் நடத்தப்படுகிறது. தகுதி சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் இடமும், தேதியும் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 6-ம் தேதி மும்பையை எதிர்த்து விளை யாடுகிறது. இந்த ஆட்டம் புனேவில் நடைபெறுகிறது. ஷாருக்கான் இணை உரிமை யாளராக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் ஏப்ரல் 7-ம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

டெல்லி டேர்டேவில்ஸ் ஏப்ரல் 8-ம் தேதி பெங்களூரு அணியையும், இதே நாளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியையும் எதிர் கொள்கின்றன.

நன்றி : தி இந்து தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.