Breaking News

பெங்களூரு, நவ. 25- கர்நாடகத்தில் 15 அரசு அதிகாரிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் சிக்கிய தங்க மற்றும் வெள்ளி நகைகள் சொத்து பத்திரங்கள் கண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் மலைத்துப் போய் உள்ளனர். தோண்டத் தோண்ட தங்க நகைகள் பணம் சிக்கிய வண்ணம் உள்ளது. தனது வீட்டு தண்ணீர் குழாய்களில் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருந்த பொதுப்பணித்துறை அதிகாரி சாந்தன கவுடா உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வளவு சொத்துக்களை ஈவு இரக்கம் இல்லாமல் எப்படி இவர்கள் சேர்த்து உள்ளார்கள் என்று பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வருமானத்தை மீறி நூற்று கணக்கான அளவுக்கு அதிகமாய் அக்கிரம சொத்து சேர்த்த கே ஏ எஸ் அதிகாரி உட்பட 15 ஊழல் அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் பெரும்பாலும் முடிவடைந்து இந்த அதிகாரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துக்க்களின் பரிசீலனையை ஊழல் ஒழிப்பு துறை ( ஏ சி பி ) அதிகாரிகள் நடத்திவருகின்றனர். வலையில் சிக்கிய ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் நடந்த சோதனைகளில் 2 கோடி 10 லட்சம் ரொக்கம் , 9 கோடி மதிப்புள்ள 17 கிலோ 299 கிராம் தங்க நகைகள் , ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அரசின் பல துறைகளில் பணியாற்றிவந்த 15 ஊழியர்களுக்கு சொந்தமான 68 இடங்களில் 503 அதிகாரிகள் கொண்ட குழுவினர் மற்றும் ஊழியர்கள் கொண்ட 68 குழுக்கள் இந்த சோதனைகளில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் கோடிக்கணக்கில் தங்க நகைகள் மற்றும் சொத்து பத்திரங்கள் உட்பட மேலும் பல முக்கிய ஆவணங்களை ஜப்தி செய்துள்ளனர்.இந்த சோதனைகளில் கிடைத்துள்ள அசையா சொத்துக்கள் மற்றும் அசையும் சொத்துக்கள் குறித்த விவரங்களை ஏ சி பி அதிகாரிகள் இவற்றின் மதிப்பீடுகள் செய்தபின்னர் மொத்த மதிப்பின் அளவு தெரியவரும். பொது பணித்துறையின் உயர் பொறியாளர் எம் பிராதாரிடம் கலபுராகியில் 2 வீடுகள் , பெங்களூரில் 1 மனை , 3 பல்வேறு நிறுவனங்களின் கார்கள் , 1 இரு சக்கர வாகனம் , 1 ஸ்கூல் பஸ் , 2 ட்ராக்டர்கள் , 54.50 லட்சம் ரொக்கம் , சுமார் 100 கிராம் தங்க நகைகள் , 36 ஏக்கர் விவசாய நிலம் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு ஆடம்பர பொருள்கள் , ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதே போல் கதக் மாவட்டத்தின் விவசாய துறை இணை இயக்குனர் ருத்ரேஷப்பாவுக்கு சொந்தமான சிவமொக்க நகரில் 2 வீடுகள் , பல்வேறு இடங்களில் நான்கு வீடுகள் , 9 கிலோ 400 கிராம் தங்க கட்டிகள் , மற்றும் தங்க நகைகள் , 3 கிலோவெள்ளி பொருள்கள் , 2 வெவேறு நிறுவன கார்கள் , 3 இரு சக்கர வாகனங்கள் , 2 ஏக்கர் விவசாய நிலம் , 15.94 லட்ச ரூபாய் ரொக்கம். மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு ஆடம்பர பொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மண்டியா மாவட்டத்தின் கே ஆர் பேட்டே ஹெச் எல் ஐ சி ஸ்ரீனிவாஸ் எந்த அதிகாரிக்கு சொந்தமான மைசூரில் 1 வீடு , மைசூரு நகரில் ஒரு குடியிருப்பு , 2 மனைகள் , மைசூரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 4 ஏக்கர் 34 குண்டே விவசாய நிலம் , நஞ்சன் கூடுவில் 1 பண்ணை வீடு , 2 கார்கள் , 2 இரு சக்கர வாகனங்கள் , 1 கிலோ தங்கம் , 8 கிலோ 840கிராம் வெள்ளி பொருட்கள் , 9.85 லட்சம் ரொக்கம் , பல வங்கிகளில் 22 லட்ச ருபாய் கையிருப்பு , மற்றும் 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு ஆடம்பர பொருள்கள் ஆகியவை கிடைத்துள்ளன. மங்களூருவின் ஸ்மார்ட் சிட்டி செயல் பொறியாளர் லிங்கேகௌடாவிடம் மங்களூருவில் வீடு , சாமராஜ்நகர் மற்றும் மங்களூருவில் 3 வீடுகள் , 2 கார்கள் , 1 இரு சக்கர வாகனங்கள் , 1 கிலோவெள்ளி பொருள்கள் , மற்றும் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பொருட்கள் ஆகியவை கிடைத்துள்ளது. சகாலா மிஷின் நிர்வாக அதிகாரி நாகராஜ் என்பவரிடமிருந்து பெங்களுரில் 1 வீடு , மற்றும் மனை , நெலமங்களாவில் 1 வீடு , நெலமங்களாவில் 11 ஏக்கர் 25 குண்டே நிலம் , நெலமங்களாவில் தொழிசாலை வடிவில் ஒரு கட்டிடம் , 3 கார்கள் , 1.76 கிலோ தங்க நகைகள் , 7 கிலோ 284 கிராம் வெள்ளி பொருள்கள் , 43 லட்சம் ரொக்கம் மற்றும் 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டு பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இதே போல் மாநகராட்சி டி பிரிவு ஊழியர் கிரி என்பவரிடமிருந்து எசவந்தபுரம் மற்றும் வேறு பகுதிகளில் 6 வீடுகள் , 4 கார்கள் , 4 இரு சக்கர வாகனங்கள் , 8 கிலோ வெள்ளி சாமான்கள் , 1.18 லட்சம் ரொக்கம் , மற்றும் 15 லட்ச ருபாய் மதிப்புள்ள வீட்டு ஆடம்பர பொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. தவிர எலஹங்காவின் அரசு மருத்துவமணையில் பிசியோ தெரபிஸ்ட்டாக உள்ள எஸ் ராஜசேகர் என்பவரிடமிருந்து மாரசாண்டாவில் 1 குடியிருப்பு , எலஹங்காவில் இரன்டு மாடி கொண்ட குடியிருப்பு , ஒரு மனை , தலமஹாடியில் ஒரு மருத்துவமனை , எலஹங்காவில் ஒரு மனை , 1 கார் , 1 இரு சக்கர வாகனம் , மற்றும் 4 லட்ச ருபாய் மதிப்புள்ள வீட்டு ஆடம்பர பொருள்கள் ஆகியவை கிடைத்துள்ளன. இதே போல் மாநகராட்சி தலைமை அலுவலக முதல் பிரிவு செயலாளர் மாயண்ணா என்பவரிடமிருந்து பெங்களூரில் 4 வீடுகள் , வேறு பகுதிகளில் 6 மனைகள் , 2 ஏக்கர் விவசாய நிலம் , 2 இரு சக்கர வாகனங்கள் , 1 கார் , 59 ஆயிரm ரொக்கம் 10 லட்சம் வங்கியில் இருப்பு , சேமிப்பு கணக்கில் 1. 50 லட்சம் , 600 கிராம் தங்க நகைகள் , 3 இடங்களில் பினாமி சொத்துக்கள் , மற்றும் 12லட்சம் மதிப்புள்ள வீட்டு ஆடம்பர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வகையில் பெல்லாரி மாவட்ட துணை பதிவாளராயிருந்து ஓய்வு பெட்ரா கே எஸ் ஷிவானந்த் என்பவருக்கு சொந்தமான மண்டியாவில் 1 வீடு , பெங்களூரில் 1 மனை , 1 கார் , 2 இரு சக்கர வாகனங்கள் , சக்ரபுரா கிராமத்தில் 1 அபார்ட்மெண்ட் , பெல்லாரி மோக்கா கிராமத்தில் 7ஏக்கர் விவசாய நிலம் மற்றும் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள வீட்டு ஆடம்பர பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வகையில் கோகாக்கில் மூத்த வாகன சோதனையாளர் ராயப்பா மரலிங்கண்ணவர் என்பவரிடமிருந்து பெலகாவியில் 1 வீடு , 22 ஏக்கர் விவசாய நிலம் , 1 கிலோ 135 கிராம் தங்க நகைகள் , 22 ஆயிரம் ரொக்கம் , மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வீட்டு பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தவிர கூட்டுறவு அதிகாரி அடவி சித்தேஸ்வரா காரப்பா மஸ்தி என்பவரிடம் பைலுஹோங்களாவில் 2 வீடுகள் , 4 ,மனைகள் , 4 கார்கள் , 6 இரு சக்கர வாகனங்கள் , 263 கிராம் தங்க நகைகள் , 945 கிராம் வெள்ளி சாமான்கள் , 1,50 லட்சம் மதிப்புள்ள வங்கி டெபாசிட்டுகள் , மற்றும் ஷேர்கள் , ரொக்கம் 1.10 லட்சம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வீட்டு பொருட்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பெலகாவியை சேர்ந்த லைன் மெக்கானிக் நாதாச்சி பிராஜி பாட்டில என்பவரிடமிருந்து பெலகாவியில் 1 வீடு , 2 மனைகள் , 1 கார் , 1 இரு சக்கர வாகனம் , 239 கிராம் தங்க நகைகள் , 1 கிலோ 803 கிராம் வெள்ளி பொருட்கள் , 38 ஆயிரம் ரொக்கம் , மற்றும் 20 லட்ச ருபாய் மதிப்புள்ள வீட்டு ஆடம்பர பொருட்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. இதே போல் தொடடபள்ளாபுராவை சேர்ந்த லக்ஸ்மிநரசிம்மையா என்ற அதிகாரியிடமிருந்து பெங்களூரு கிரமந்தரத்தில் பல இடங்களில் 5 வீடுகள் , 6 மணிகள் , 25 குண்டே நிலம் , 765 கிராம் தங்க நகைகள் , 15 கிலோவெள்ளி பொருட்கள் , 1 கார் , 2 இரு சக்கர வாகனங்கள் , 1.13 லட்சம் ரொக்கம் ஆகியவை கிடைத்துள்ளன. இந்த வகையில் மேலும் நிர்மிதி திட்ட முன்னாள் இயக்குனர் வாசுதேவ் என்பவரிடம் பெங்களூரில் 5 வீடுகள் , மனைகள் , நெலமங்களாவில் 4 வீடுகள் , மாகடி தாலுகாவில் 10 ஏக்கர் 20 குண்டே விவசாய நிலங்கள் , 850 கிராம் தங்க நகைகள் , 9. 5 கிலோ வெள்ளி , 15 ல்ட்சம் ரொக்கம் மற்றும் 9 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபகரணங்கள் ஆகியவை கிடைத்துள்ளன . இதே போல் நந்தினி டைரி மேலாளர் கிருஷ்ணா ரெட்டி என்ற அதிகாரியிடமிருந்து பெங்களூரில் 3 வீடுகள் , பல பகுதிகளில் 9 மனைகள் , சிந்தாமணியில் மொத்தம் 5 ஏக்கர் 30 குண்டே விவசாய நிலம் , ஓசகோட்டேவில் 1 பெட்ரோல் வங்கி , 383 கிராம் தங்க நகைகள் , 3395 கிராம் வெள்ளி , 3 லட்சம் ரொக்கம் 3 லட்சம் மதிப்புள்ள வீட்டு ஆடம்பர பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.