Latest News
சென்னையில் மியாவாக்கி காடுகள்!பா.ஜ.க. நிர்வாகி கொலை - 4 பேரை கைது செய்தது தனிப்படைஒடிசாவில் வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்கள்பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!கல்குவாரி விபத்தில் மீட்பு பணி தாமதத்திற்கு என்ன காரணம்... ஓய்வு பெற்ற சிஐஎஸ்எஃப் வீரர் விளக்கம்புதுடெல்லி: தொலைத்தொடர்பு துறையின் ஒழுங்குமுறை ஆணையமான டிராய்யின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். விழாவில் அஞ்சல்தலை ஒன்றை மோடி வெளியிட்டார். சென்னை ஐ.ஐ.டி. தலைமையில் 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 5-ஜி சோதனை கருவியை வெளியிட்டார். 21-ம் நூற்றாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை தொலைத்தொடர்பு தீர்மானிக்கும். 5-ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அடுத்த 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 450 பில்லியன் (ரூ.34 லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களாக உயர்த்தும். நாட்டுக்கு சொந்தமான 5ஜி தர நிலைய 5ஜி வடிவில் உருவாக்கியுள்ளது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். கிராமங்களுக்கு 5ஜி தொழில் நுட்பத்தை கொண்டு செல்வதில் இது பெரும் பங்கு வகிக்கும். நாம் சுயமாக தயாரித்த 5ஜி தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் முக்கியமாக மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கான தன்னிறைவுக்கான ஒரு முக்கியமான படியாகும். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் ஆட்சி, வாழ்வின் எளிமை, வணிகம் போன்றவற்றிலும் சாதகமான மாற்றங்களை கொண்டுவர போகிறது. இது விவசாயம் சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கும். இது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 2ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. 4ஜிக்கு நாடு வெளிப்படையாக இருக்கிறது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை இரண்டில் இருந்து 200க்கும் மேல் விரிவடைந்துள்ளது. இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக உள்ளது. ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தால் இந்தியாவில் தொலைத்தொடர்பு டேட்டா கட்டணங்கள் மலிவாக உள்ளது. அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவர இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பிளாஷ்டிக் அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்த பிரபல இளம் நடிகைதஞ்சையில் ஆடிட்டர் சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சுராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவுகோவை: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் – பிரதமர் மோடி

0
புதுடெல்லி,
உலக பொருளாதார கூட்டமைப்பு, ஆண்டுதோறும் தனது மாநாட்டை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பனிச்சறுக்கு நகரான டாவோஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வந்தது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு இந்த மாநாட்டை நடத்த முடியவில்லை. இந்த ஆண்டு கோடைகாலத்துக்கு இம்மாநாடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த ஆண்டுக்கான மாநாடு காணொலி வாயிலாக 5 நாள் நடத்த உலக பொருளாதார கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டுக்கான மாநாடு ‘டாவோஸ் செயல்திட்ட மாநாடு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக பொருளாதார கூட்டமைப்பின் உச்சிமாநாடு நேற்று தொடங்கியது. சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் சிறப்புரையுடன் இந்த மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார்.
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக இந்தியாவை உருவாக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம். இந்திய இளைஞர்கள் தொழில்புரிவதற்கான ஆர்வத்தில் உள்ளனர். புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கவும், அதை ஏற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர்’ என்றார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.