Latest News
ரூ.3.50 கோடி சம்பளம் - 'போர் அடிக்குது' என வேலையை ராஜினாமா செய்த இளைஞர்!சென்னையில் மியாவாக்கி காடுகள்!பா.ஜ.க. நிர்வாகி கொலை - 4 பேரை கைது செய்தது தனிப்படைஒடிசாவில் வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி 3 கி.மீ. தூரம் ஓட்டிச்சென்ற டிரைவர்கள்பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!கல்குவாரி விபத்தில் மீட்பு பணி தாமதத்திற்கு என்ன காரணம்... ஓய்வு பெற்ற சிஐஎஸ்எஃப் வீரர் விளக்கம்புதுடெல்லி: தொலைத்தொடர்பு துறையின் ஒழுங்குமுறை ஆணையமான டிராய்யின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். விழாவில் அஞ்சல்தலை ஒன்றை மோடி வெளியிட்டார். சென்னை ஐ.ஐ.டி. தலைமையில் 8 கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய 5-ஜி சோதனை கருவியை வெளியிட்டார். 21-ம் நூற்றாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை தொலைத்தொடர்பு தீர்மானிக்கும். 5-ஜி தொலைத்தொடர்பு நெட்வொர்க் அடுத்த 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 450 பில்லியன் (ரூ.34 லட்சம் கோடி) அமெரிக்க டாலர்களாக உயர்த்தும். நாட்டுக்கு சொந்தமான 5ஜி தர நிலைய 5ஜி வடிவில் உருவாக்கியுள்ளது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் விஷயம். கிராமங்களுக்கு 5ஜி தொழில் நுட்பத்தை கொண்டு செல்வதில் இது பெரும் பங்கு வகிக்கும். நாம் சுயமாக தயாரித்த 5ஜி தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் முக்கியமாக மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கான தன்னிறைவுக்கான ஒரு முக்கியமான படியாகும். 5ஜி தொழில்நுட்பம் நாட்டின் ஆட்சி, வாழ்வின் எளிமை, வணிகம் போன்றவற்றிலும் சாதகமான மாற்றங்களை கொண்டுவர போகிறது. இது விவசாயம் சுகாதாரம், கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை அதிகரிக்கும். இது பல வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 2ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது. 4ஜிக்கு நாடு வெளிப்படையாக இருக்கிறது. தற்போது 5ஜிக்கு மாறியுள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொபைல் உற்பத்தி தொழிற்சாலை இரண்டில் இருந்து 200க்கும் மேல் விரிவடைந்துள்ளது. இந்தியா இன்று உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக உள்ளது. ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தால் இந்தியாவில் தொலைத்தொடர்பு டேட்டா கட்டணங்கள் மலிவாக உள்ளது. அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவர இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பிளாஷ்டிக் அறுவை சிகிச்சையின் போது உயிர் இழந்த பிரபல இளம் நடிகைதஞ்சையில் ஆடிட்டர் சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சுராஜா அண்ணாமலைபுரத்தில் வீடுகளை இடிக்க தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு

கோவை: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

0
கோவை,
கோவை அருகே உள்ள பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்கு 7-வது மலையில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார்.
இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், திடீரென்று சீதோஷ்ண நிலை மாறுவதால், ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சித்ரா பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினார்கள். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி முதல் திடீரென்று பக்தர்கள் மலை மீது செல்ல வனத்துறை தடை விதித்தது. வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காரணம் கூறப்பட்டது.
இதன் காரணமாக பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கம்போல மே மாதம் முழுவதும் மலை மீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் வனத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்தும் பக்தர்கள் முறையிட்டனர். இதையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு கடந்த 6-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மலை மீது செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்லக்கூடாது. அதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்லக்கூடாது.
அத்துடன் மலை மீது ஏற்கனவே செல்லக்கூடிய பாதையில் மட்டும்தான் செல்ல வேண்டும். பாதை தவறி கும்பலுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வது, வனவிலங்குகளை சீண்டுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.